Liked My Posts? BUY ME A COFFEE என்று பதிவிற்கு பக்கத்தில் இருந்தது. என்ன இது என்று click பண்ணி பார்த்தால், காசு அனுப்பட்டாம்..
சாருவுக்கு பிறகு இவர்தான்போல.. அரசியல்வாதியின் பிள்ளையப்பா நீ..
இலங்கையில் பயம் இல்லாமல் காத்திரமாக எழுதிய ஒரு பதிவர் நீர்த்துப்போய்விட்டார் என்று தெரிகிறது. எப்போது அவர் பதிவர் சந்திப்புக்கு போனாரோ, அன்று அவரை ஜனநாயக ரீதியில் காயடித்திருப்பது தெளிவாக தெரிகிறது. அந்நியனில் கடைசியில் அம்பியை பார்த்து விவேக் சொல்வது ஞாபகம் வருகிறது.
குரங்கின் மீது பலருக்கு திடீர் பாசம். ஒரு சிலரின் பதிவில் அது வியாபித்து இருப்பதில் வியப்பு ஏதும் இல்லை. மெனக்கெட்டு video ஐ பார்த்தால் இவங்க build up கொடுக்கிற அளவுக்கு பெருசா ஒண்டும் நடக்கல எண்டு தெரியுது. சின்ன சின்ன சந்தோஷங்கள்
பதிவுலகத்தினால் சில சில்லறைப்பத்திரிகைகள் பயன்பெறுவது தெளிவாக தெரிகிறது. பதிவர்கள் தேடித்தெரிந்து எழுதுவதை அப்படியே copy பண்ணி போட்டு காசு பார்க்கும் இவர்கள் பதிவின் பெயரைப்போடுவதுமில்லை. பதிவருக்கு சன்மானம் கொடுப்பதுமில்லை. தரம்கெட்ட வியாபாரிகள்.
பிடித்த சொற்பொழிவாளர் "சுகி சிவம்" என ஒரு பதிவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ம்.. துரோகி பட்டம் தந்துடுவாங்க. பாத்து..
பதிவர்களே.. உங்க பதிவு பிடிச்சிருந்தா ஒரு ஓட்டு நிச்சயம் போடுவேன். ஆனா உங்க பதிவில ஓட்டு போடுறதுக்க இல்லாட்டா நான் என்ன செய்றது?நகைச்சுவையோடுதான் சிலர் ஓட்டுப்பட்டையும் இணைத்துள்ளார்கள்.
சுறா படத்துக்கு ஒரு சிலருக்கு ticket கிடைச்சிருக்காம். போகாட்டி வேற யாருக்காவது கொடுக்கலாமே.
இலவச ticketல படம் பார்த்துட்டு படத்தை பத்தி ஆஹா ஓஹோ என எழுதும் சில பதிவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு இலவச ticket கொடுப்பது இதுக்குத்தான் என்றாலும் ஒரு நியாயம் இருக்கவேண்டும். இலவசமா பாக்குற உங்களுக்கு எல்லாம் நல்லாத்தான் இருக்கும். 300 குடுக்கிறவனுக்கு அப்படி இருக்குமா? இலவசமா படம் பாக்குறவங்க எல்லாம் விமர்சனம் எழுதக்கூடாது என்று சுய கட்டுப்பாட்டை விதித்துக்கொள்வார்களா? அல்லது இப்படத்தை இலவசமா பார்த்தேன் என்றும் சேர்த்து எழுதமாட்டார்களா? (இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் என்று வருவதுபோல)
சைந்தவி கடிதம் கொஞ்சகாலம் hot topic ஆக இருந்துச்சு. இருந்தாலும் எதையும் வாசிக்கல. நேத்துதான் சைந்தவி பத்தி ஒருமாசம் 2 வாரத்துக்கு முந்தைய பதிவ வாசிச்சேன். ரொம்ப பிடிச்சுது. இத்தனை நாள் வாசிக்கலையே என்று கவலையும் வந்தது.
ஆனா இந்த பதிவ எழுதின பதிவர் சிங்கப்பூருக்கு பக்கத்து நாட்டுல LOVE பண்றாராமே..







இன்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த ஐமசுமு அபேட்சகர் கீதா குமாரசிங்ஹ குறிப்பிட்ட விடயம் மக்களிடம் தனக்கு ஆதரவு இருந்தபோதும் தான் தோற்றமைக்கு காரணம் எல்லா பொதுமக்களுக்கும் தெரிந்ததே என்பதாகும்.
கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த அசாத் சாலியின் பிரத்யேக அலுவலர் கூட இவ்வாறான ஒரு கருத்தையே பத்திரிகைகளுக்கு தெரிவித்துள்ளார். இன்று வெற்றி பெற்றிருக்கும் சிலர் முதல் தடவை விருப்பு வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் தன்னை விட பின்தங்கி இருந்ததாகும் மீள கணக்கிடப்படும்போது அவர்கள் தன்னை தாண்டி சென்றதாகவும் அவர் கூறுகிறார்.
அதேவேளை நாகரீகமான அரசியலைப்பற்றி பேசிவந்த மிலிந்த மொறகொட அவர்கள் வாக்கு கணக்கப்படும் நிலையத்திற்கு சமூகமளித்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் அவ்விடத்திற்கு வந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்றும் கருத இடமுண்டு.
வாக்குஎண்ணும் நிலையத்தில் ஆளும் ஐமசுமு இன் வேட்பாளர்களிடையேயே சூடான வார்த்தப்பிரயோகங்களும் கைகலப்பும் இடம்பெற்றுள்ளது. நிலமையை கட்டுக்குள் கொண்டுவந்து அமைதியைப்பேண பொலிஸ் படைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
விருப்பு வாக்குகளை மீண்டும் எண்ணுமாறு ஐமசுமு இன் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜயந்த முதலில் கோரியிருக்கிறார். இச்சந்தர்ப்பத்தில் அவர் வெற்றி பெற்றவர்களின் பட்டியலில் இல்லாமல், அல்லது கடை இடத்துக்கான போட்டியில் இருந்ததாக தெரிகிறது.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம சில வாக்கெடுப்பு நிலையங்களின் வாக்குகளை மீள எண்ணுமாறு கேட்டபோதும் அதே கட்சியைச்சேர்ந்த துமிந்த சில்வா அதற்கு எதிர்ப்புத்தெரிவித்திருந்தார்.



வாக்களிக்க வந்தோர் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் இதுவரை வெளிவராத நிலையில் களத்தகவல்கள் இது பெரும்பாலும் 40%க்கும் 50%க்கும் இடையிலேதான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. உச்சபட்சம் 50% என்று கொண்டால்கூட; ஆட்சியமைக்கும் குழுவுக்கு 2/3 பெரும்பானமை கிடைத்தாலும், இது மொத்த பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் தொகையில் வெறும் 33% ஆக இருக்கும். அதாவது 2/3 பெரும்பான்மை கிடைக்கும் கட்சி மொத்த வாக்காளர்களில் 1/3 பங்கு ஆதரவைத்தான் கொண்டிருக்கும். ஏனையோர் இக்கட்சிதான் சிறந்த தெரிவு என்று கருதவில்லை என்பதை இது தெளிவாக்குகிறது.
இதை தவிர்த்து பார்த்தால்கூட இத்தேர்தலில் ஏதேனும் ஜனநாயக பண்புகள் இருந்தனவா என்ற கேள்விகள் இருக்கின்றன. இவற்றில் முதலாவது கவனிக்க வேண்டிய அம்சம், ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்று 2 ,மாதங்கள் மாத்திரம் கடந்துள்ள நிலமையில் இத்தேர்தல் நடைபெற்றமையாகும்.














