Wednesday, March 31, 2010

வெற்றியின் விடியலும் திருமண ஆசையை சொன்ன பெண்களும்

இலங்கை பதிவுலகின் மிக முக்கிய புள்ளியான அறிவிப்பாளர் லோஷனின் விடியல் நிகழ்ச்சி வாரநாட்களில் காலை 6 மணி முதல் ஒலிபரப்பாகிறது. இன்றைக்கு தலைப்பு "எந்த விசயத்துக்காக பொறுமையின் எல்லை வரை காத்திருப்பீங்க" என்று இருந்தது..

ஆனால் பல நேயர்கள் சொன்ன பல விடயங்கள் "எதுக்காக இதுவரை காத்திருக்கீங்க" என்ற மாதிரி போனது.

இதுதான் சந்தர்ப்பம் என்று பெண்கள் நினைத்தார்களோ என்னவோ, திருமணத்துக்காக என்று சொல்ல தொடங்கிவிட்டார்கள். மகள் இப்படி இலங்கைக்கு கேட்க ரேடியோவிலயும் (உலகுக்கு கேட்க் - இணையத்திலும் ஒலிபரப்பாவதால்) சொல்ல தொடங்கிவிட்டதால் இனி தந்தைமார் உடனடியாக இவர்களுக்கு திருமணம் செய்து வைக்கவேண்டும். இல்லாவிட்டால் இவர்களின் அடுத்த நகர்வு பயங்கரமாக இருக்கும் போல இருக்கு..

ஒரு சிலர் தான் விரும்புவோருக்கு ஒரு Indication / warning கொடுத்தாங்களோ தெரியாது. இதுபோதாதென்று லோஷனும் Romantic song எல்லாம் போட்டு உசுப்பேத்தி விட்டுடாரு.

0 comments:

Post a Comment

இது என்ன கொடும சார் இன் mobile friendly version ஆகும்.  கணணித்திரையில் பார்க்க http://eksaar.blogspot.com/