Sunday, February 21, 2010

ஊடகங்களில் மதத்திணிப்பா "வணக்கம்"?

இன்று சக்தி TV இல் Grand Master நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தபோது "வணக்கம்" ஊடகங்களில் ஒரு மதத்திணிப்பின் கருவியாக இருக்கிறதா என்றொரு சந்தேகம் வந்தது.

முஸ்லிம் மாணவி ஒருவருக்கு நிகழ்ச்சியின் அறிவிப்பாளரும் நிகழ்ச்சி நடத்துபவரும் "வணக்கம்" என்றே வரவேற்றனர். (இங்கு வரவேற்றனர் என்ற வார்த்தை பிரயோகம் சரியானதாக தெரியவில்லை.)

முதல் சந்தேகம்
வணக்கம் என்பதால் கருதப்படுவது என்ன? எனக்கு தெரிந்த தமிழின் படி வணக்கம் என்றால் வணங்குதல் என்றல்லவா பொருள்படும்? அப்படி பொருள்படுமாயின் "வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே" என்ற முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கையோடு அது முரண்படுகிறது. அதேவேளை அறிவிப்பாளர் நேயரின் மதம்தொடர்பான வரவேற்பு முறையத்தான் கையாளவேண்டும் என்பது என் வாதமல்ல. அதுவும் அறிவிப்பாளர் மீதான மத திணிப்பா என்ற கேள்வியெழுகிறது.

இரண்டாவது சந்தேகம்
இது அனுசரித்துப்போதல், இன நல்லுறவு, சகிப்புத்தன்மை போன்ற ஏதாவது ஒரு விடயத்தின் கீழ் வருகிறதா? அப்படியாயின் அறிவிப்பாளர் எம்மதத்தை சார்ந்தவராக இருக்கிறாரோ அவரது மத வழக்கப்படி உள்ள சொல்லை பிரயோகிக்கப்படவேண்டும். சகிப்புத்தன்மை, நல்லுறவு போன்றன இரு பக்கமும் இருக்கவேண்டுமல்லவா? ஒரு பக்கம் மாத்திரம் இருந்தால் அது திணிப்பாகவே அமையுமல்லவா? ஆனால் தமிழ் ஊடகங்களில் மத நிகழ்ச்சிகள் அல்லாத மற்ற நிகழ்ச்சிகளில் அவ்வாறு பிரயோகிக்கப்பட அனுமதிக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது.

மூன்றாவது சந்தேகம்
மதங்களை தாண்டிய வரவேற்புச்சொல் ஏதாவது தமிழில் இருக்கிறதா? ஏன் அவ்வாறான ஒரு ஆன சொல்லை எல்லா அறிவிப்பாளர்களும் பயன்படுத்தக்கூடாது?

குறிப்பு: சந்தேகங்களைத்தான் கேட்கிறேன். எனவே சந்தேகங்களை தீர்க்க நாகரிகமான சொற்பிரயோகங்களையே பிரயோகிக்கவும்.

0 comments:

Post a Comment

இது என்ன கொடும சார் இன் mobile friendly version ஆகும்.  கணணித்திரையில் பார்க்க http://eksaar.blogspot.com/