Thursday, May 20, 2010

பயங்கரவாதம் அழிக்கப்பட்டு ஓராண்டு

பயங்கரவாதம் இலங்கையிலிருந்து ஒழிக்கப்பட்டு ஓராண்டாகின்றது. இது தொடர்பான எனது பார்வைகள் சிலவற்றை பகிரலாம் என நினைக்கிறேன்.

You can also say that the government did a bunch of shafty things, but on the scale of the world’s biggest suicide bombers? Not so much. I realize this in a few paragraphs glosses over a litany of sins and countersins but, with all due respect, I’m tired of it.
indi.ca


இது பயங்கரவாதத்திற்கு எதிரான வெற்றியாக நான் கருதுகிறேன். தமிழ் மக்களுக்கு எதிரான வெற்றியாக அல்ல. தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளும் ஜனநாயகரீதியான போராட்டங்களும் வெற்றிபெறவேண்டும்.


இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் கடவுள் இவ்வெற்றி விழாவை அங்கீகரிக்கவில்லை என்பதை காட்டுவதாக் சிலர் சொல்கிறார்கள். புலி ஆதரவாளர்கள் ஒரு கதையையும் பொன்சேகா ஆதரவாளர்கள் அவர் சிறையிட்ப்படமையையும் சொல்கிறார்கள். இவ்வாறான கற்பிதங்கள் எந்த நன்மையையும் தரா


இந்த ஓராண்டில் தெளிவான நன்மைகளை சகலரும் அனுபவிக்கிறார்கள். பாதுகாப்பு கெடுபிடிகள் 90% நீக்கப்பட்டுள்ளது. பயமின்றி பயணம் செய்ய முடிகின்றது. வட கிழக்கில் பாரிய அபிவிருத்தி நடந்துகொண்டிருக்கிறது.


கடந்த தேர்தலில் ததேகூ இன் வெற்றியை புலி அனுதாப வெற்றியாக சிலர் தப்பபிபிராயம் கொண்டிருக்கிறார்கள். ததேகூக்கு ஆதரவளித்த மக்கள் அது அரசுடன் இணைந்து அபிவிருத்தி பணிகளில் ஈடுபடவேண்டும் என்று எதிர்பார்ப்பது இதை உறுதி செய்கிறது.


பொன்சேகா இன்னொரு ஜனதிபதி தேர்தலில் நின்று வெற்றி பெறமுடியாது என்பது தெளிவானது. யுத்த வெற்றியின் மிக முக்கிய பங்காளியான ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சின் செய்லாளரும் பொன்சேகாவும் சில விட்டுக்கொடுப்புகளை மேற்கொண்டு ஒருவரை ஒருவர் நோண்டாமல் இருக்கவேண்டும் என்பது அவா.. ஆனால் பொன்சேகாவின் போராட்டகுணம் இதற்கு எப்போதும் தடையாக இருக்கும்.


இந்த வெற்றியை அரசியல் இலாபங்களுக்கு பயன்படுத்தும் அரசியல்வாதிகள் மீது எரிச்சல் வருகிறது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தமைக்காக நன்றிக்கடனாக மக்கள் இவர்களுக்கு வாக்களித்ததை பலர் தவறாக புரிந்துகொண்டுள்ளார்கள் என்று தெரிகிறது. 6 வருடத்தின்பின் மீண்டும் நன்றிக்கடன் ஒன்றாக மட்டும் வாக்களித்தல் இடம்பெறாது என்பதுமட்டும் நிஜம்.


பல இணையங்கள் மீண்டும் தமிழ் மக்களை அழிவில் வீழ்த்துவதற்காக எதை எதையோ எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
  • யாராவது இங்கிலாந்தில், அவுஸ்த்திரேலியாவில் குடியுரிமை பெறுவற்கு
  • தமிழ்நாட்டில் செல்லாக்காசான அரசியல்வாதிகள் பிழைப்பு நடத்துவதற்கு
  • தமிழிஷ் இல் வோட்டு சேர்ப்பதற்கு
  • ஹிட்ஸ் அதிகமாக எடுப்பதற்கு
இலங்கைவாழ் தமிழ் மக்களை உசுப்பேத்திவிடுவது மிகவும் கீழ்த்தரமான உத்தியாகும்

0 comments:

Post a Comment

இது என்ன கொடும சார் இன் mobile friendly version ஆகும்.  கணணித்திரையில் பார்க்க http://eksaar.blogspot.com/