Monday, January 18, 2010

Election Jokes - 5

"சிறுபான்மை மக்களை வந்தேறு குடிகள் என்று சொன்ன பொன்சேக்காவுக்கு எப்படி சிறுபான்மை மக்கள் வாக்களிப்பது" ஆஸாத் சாலி

பொன்சேக்கா அப்படி சொன்னபோது அரசு அவருக்கெதிராக என்ன நடவடிக்கை எடுத்தது?


"பள்ளிகளில் பாங்கு சொல்வதை நிறுத்திய சரத் என் சில்வா, பொன்சேக்காவுடன்..." ஆஸாத் சாலி

பாராளுமன்றத்தில் சட்ட திருத்தத்தை கொண்டுவருவது மூல்ம் பாங்கு சொல்வதை அனுமதிக்க முடியும் என ஹக்கீம் சொன்னபோது, உயர் நீதி மன்ற தீர்ப்பில் தலையிட முடியாது என்று கூறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச; பெற்றோல் விலைக்குறைப்பு தொடர்பான தீர்ப்பில் உயர் நீதிமன்ற தீர்ப்பை கவனத்தில் எடுக்கவில்லையே.


"நாம் செய்வதை சொல்வோம்.. சொல்வதை செய்வோம்" ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச

ஹிஸ்புல்லாஹ்க்கு முதலமைச்சர் பதவி என்றும் ஜனஹமுவவில் சொன்னீர்கள்..


"தோல்வியை தவிர்ப்பதற்காகவே சிலர் பொய்யான் வாக்குறுதிகளை வழங்குகின்றனர்" ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச

= வெற்றி பெறுவதற்காகவே சிலர் பொய்யான வாக்குறுதிகளை வழங்குகின்றனர்


"லஞ்ச ஆணைக்குழுவில் நம்பிக்கை இல்லை" விமல் வீரவன்ச

லஞ்ச குற்றச்சாட்டில் மட்டும் நம்பிக்கை போல..


"நாம் அந்த பணத்தை தொடவுமில்லை.. இன்னும் எண்ணிப்பார்க்கவுமில்லை" விமல் வீரவன்ச

எண்ணிப்பார்க்காமலா ஒரு மில்லியன் என்று சொன்னீர்கள்?



0 comments:

Post a Comment

இது என்ன கொடும சார் இன் mobile friendly version ஆகும்.  கணணித்திரையில் பார்க்க http://eksaar.blogspot.com/