Tuesday, January 12, 2010

BREAKING NEWS : சிவாஜிலிங்கத்துக்கும் "எக்சார்"க்கும் சம்பந்தமில்லை



சற்றுமுன் கொழும்பின் பிரபல ஹோட்டலில் நடைபெற்ற நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் "எக்சார்" என சுருக்கமாக அழைக்கப்படும் "என்ன கொடும சார்" என்ற வலைப்பதிவுக்கும் சிவஜிலிங்கத்துக்கும் எவ்வித தொடர்புமில்லை என்று விளக்கப்பட்டது.

கடந்த ஞாயிறு Sunday Times பத்திரிகையில் வெளிவந்திருந்த கட்டுரை தாங்கியிருந்த கார்ட்டூனில் சிவாஜிலிங்கம் கையில் இருந்த சின்னம் "எக்சார்" இன் சின்னம் அல்லவெனவும், இது தொடர்பாக வாசகப்பெருமக்கள் குழப்பமடையத்தேவையில்லை எனவும் விளக்கப்பட்டது.

எக்சார் இன் சின்னத்துக்கும் இக்கார்ட்டூனில் இருக்கும் சின்னத்துக்கும் இடையே தெளிவான வித்தியாசங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது இப்பத்திரிகை மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் எண்ணம் இருக்கிறதா என பத்திரிகையாளர் ஒருவர் கேட்டபோது, அவ்வாறான தீர்மானத்திற்கு இதுவரை வரவில்லை எனவும் தெளிவாக்கப்பட்டது.




0 comments:

Post a Comment

இது என்ன கொடும சார் இன் mobile friendly version ஆகும்.  கணணித்திரையில் பார்க்க http://eksaar.blogspot.com/