அறிவிப்பாளர் லோஷனுக்கு சாகித்திய விருது கிடைப்பது பற்றிய செய்தியை நேற்று வந்தியத்தேவனின் உளறல்கள் மூலம் அறிந்தேன்.
அத்துடன் இலங்கையின் மூத்த படைப்பாளியான மேமன் கவிக்கும் சாகித்திய விருது கிடைக்கிறது.
உளறல்களில் இந்த மேமன் கவியை அறிமுகப்படுத்தும்போது பயன்படுத்திய "வட இந்திய குஜராத் மாநிலத்தைச் சார்ந்த" என்ற சொற்றொடர் எனக்கு பிடிக்கவில்லை.
இலங்கையை சேர்ந்த படைப்பாளியை வெறுமனே இலங்கையின் மேமன் சமூகத்தை சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்தியிருக்கலாம். ஆனால் இந்திய என்ற சொற்றொடர் அவரை பிரித்து வைக்கிறது என்பது என் கருத்து.
குறிப்பிட்ட் பதிவிற்கு நான் இட்ட பின்னூட்டத்தில் லோஷன் அண்ணாவுக்கு வாழ்த்து தெரிவித்தும் இச்சொற்றொடரை எதிர்த்தும் பின்னூட்டமிட்டிருந்தேன்.
இருந்தும் 24 மணித்தியாலம் கழிந்தபின்னும் அப்பின்னூட்டம் இதுவரை பிரசுரிக்கப்படவில்லை.
அத்துடன் "வட இந்திய குஜராத் மாநிலத்தைச் சார்ந்த" என்ற சொற்றொடரும் இதுவரை நீக்கப்படவில்லை. அல்லது இன்னமும் நியாயப்படுத்தப்படவில்லை.
தன்னால் எழுதப்படுத்தப்பட்ட ஒரு கருத்தை நியாயப்படுத்த முடியாத பதிவர்களுக்கும் சாகித்திய விருதுபெறும் லோஷனின் எழுத்துக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்..
0 comments:
Post a Comment